வணக்கம்.
விளையாட்டாக ஆரம்பித்து இன்று ஓராண்டு முடியும் தருவாயில் உள்ளது, நமது பள்ளி வலைத்தளம் ! இத்துடன் மொத்தம் 45 பதிவுகள் போடப்பட்டுள்ளன. இப்பதிவுகள் சிலருக்காவது பயன் தரும் வகையில் அமைந்திருக்கும் என நம்புகிறேன்.
தளத்தின் பதிவுகள் சில பிரபல தமிழ் நாளேடுகளில் வெளிவந்த செய்திகளில் இருந்து எடுத்து பதிவேற்றம் செய்யப்பட்டது, என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் பள்ளி சார்ந்த பதிவுகள், நிழற்படங்கள் அனைத்தும் பள்ளி சார்பாக எடுக்கப்பட்டவையே ஆகும்.
நமது தளத்தில் பின்னூட்டங்கள் இட்ட நண்பர்கள், தமிழ் இண்ட்லியில் வாக்கு அளித்தவர்கள் மேலும் மின்னஞ்சல் மூலம் பாராட்டு தெரிவித்தவர்கள் என அனைவருக்கும் நன்றிகள்..
இனிப்பான செய்தி: நமது பள்ளி வலைத்தளத்தை, பிளாக்கரில் இருந்து மாற்றி தனி வலைத்தளமாக (டொமைன்) மாற்ற விழைகிறேன். விரைவில் எதிர்பாருங்கள்..! (தை பிறந்தால் வழி பிறக்கும்)
www.arimalamschool.com
www.arimalamghss.com
www.arimalampalli.com
www.ghssarimalam.com
www.arimalamghss.com
www.arimalampalli.com
www.ghssarimalam.com
நீங்கள் இதில் ஒரு முகவரியை தேர்வுசெய்து, பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.. அல்லது சைடு பாரில் ஓட்டு போடவும்.
வேண்டுகோள்: இந்த தளத்தில் அரிமளம் பள்ளியின் ஆசிரியர்கள், இந்நாள் & முன்னாள் மாணவர்கள் மற்றும் விருப்பம் உள்ள நண்பர்கள் என அனைவரும் பங்களிக்கலாம். தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
- அன்புராஜா
No comments :
Post a Comment