Showing posts with label அரசு மேல்நிலைப்பள்ளி. Show all posts
Showing posts with label அரசு மேல்நிலைப்பள்ளி. Show all posts

Thursday, 11 June 2015

இன்றைய நாளிதழ்களில் எம் பள்ளி




Sunday, 2 February 2014

அரசு மேல்நிலைப்பள்ளி - ஆங்கில இலக்கிய மன்ற பரிசளிப்பு










அரசு மேல்நிலைப்பள்ளி - ஆங்கில இலக்கிய மன்ற விழா புகைப்படங்கள்










அரசு மேல்நிலைப்பள்ளி - ஆங்கில இலக்கிய மன்ற விழா 2014



ஆங்கில இலக்கிய மன்ற விழா
English Literary Club Fest’ 2014

  புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் R சண்முகம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை மன்னர் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் S கணேசன், மஹாராஸ்ட்ரா Sanjeevan Vidyalaya international பள்ளியின் முன்னாள் முதல்வர் ஹெலென் தன்ராஜ், மலையேற்று வீரராகவும், ஹாக்கி மற்றும் கால்பந்து விளையாட்டின் தேசிய அளவில் நடுவராகவும் பணியாற்றிய ஜான் S தன்ராஜ், சிறப்புப் பேச்சாளர்களாக ஆலங்குடி அரசு மேனிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் வின்செண்ட், அருள்தன் தாஸ் அறக்கட்டளை செயலாளர் ரவி தன்ராஜ்  அகியோர் கலந்துகொண்டு பேசினர்.

முன்னதாகப் பேசிய மன்னர் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் கணேசன் கால மாற்றத்தில் காணாமல் போய்விடாமல் இருக்கவும், தன்னையும் தன் திறமையையும் அறுமுகப்படுத்தவும், ஆங்கில மொழி ஆற்றல் அவசியம் என்றும், மெட்ரிக் பள்ளி மற்றும் கல்லூரிகளையும் விஞ்சும் அளவிற்கு இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இலக்கியம் சார்ந்த படங்கள், செய்திகள், மாணவர்களின் திறமைகள் இருந்தன என்றும், வார்த்தை என்று படிக்காமல் இது நம் வாழ்க்கை என்று படித்தால் வசப்படும் வாழ்க்கை என்றும் சிறு சிறு கதைகள் மூலமும் அழகாக விளக்கினார்.

பள்ளி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் எல்லா மாணவர்களுக்கும் இலவசமாக ஸ்போக்கன் இங்க்லீஸ் புத்தகம் வெளியிடப்பட்டு வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆங்கில நாடகம், நடனம், அபிநயக்கூத்து, ஆங்கில நகைச்சுவை துணுக்குகள், மூன்று நிமிடத்தில் ஓவியம் வரைதல் மற்றும் உரையாடல் ஆகியவற்றை முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசி செய்துகாட்டி மாணவர்கள் அசத்தினார்கள். இலக்கியமன்றப் போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை முதுகலை ஆங்கில ஆசிரியர் பி ஆண்டனி செய்திருந்தார். பள்ளி மாணவி நிவேதா நன்றி கூறினார்.

Sunday, 3 March 2013

அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் - பரிசு

அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற 12 வகுப்பு, 10 வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு "மணி-ஜெகதாம்பாள்" அறக்கட்டளை சார்பாக கத்தார் நாட்டில் பணிபுரியும் திரு. முத்துக்குமார் அவர்கள் ரூ.10000 இருவருக்கு வழங்கினார்.

இப்பரிசை  அவரது தகப்பனார் திரு. மணி அவர்கள் தனது திருக்கரங்களால்  முதலிடம் பெற்ற மாணவ, மாணவியரின் பெற்றோரிடம் வழங்கி சிறப்பித்தார்.

அவர்களுக்கு அனைவரின் சார்பாக என் நெஞ்சார்ந்த மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேண்.

12 முதலிடம் ரூ. 5000 - ரா.மாலதி

10 முதலிடம் ரூ. 5000 -  மு.நவீனா


-

-