ஆங்கில இலக்கிய மன்ற விழா
English
Literary Club Fest’ 2014
புதுக்கோட்டை
மாவட்டம், அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா வெகு
சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் R சண்முகம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை மன்னர் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர்
முனைவர் S கணேசன், மஹாராஸ்ட்ரா Sanjeevan Vidyalaya international பள்ளியின் முன்னாள்
முதல்வர் ஹெலென் தன்ராஜ், மலையேற்று
வீரராகவும், ஹாக்கி மற்றும் கால்பந்து விளையாட்டின் தேசிய அளவில் நடுவராகவும்
பணியாற்றிய ஜான் S தன்ராஜ், சிறப்புப்
பேச்சாளர்களாக ஆலங்குடி அரசு மேனிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் வின்செண்ட், அருள்தன் தாஸ் அறக்கட்டளை செயலாளர் ரவி தன்ராஜ் அகியோர்
கலந்துகொண்டு பேசினர்.
முன்னதாகப் பேசிய மன்னர் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர்
கணேசன் கால மாற்றத்தில் காணாமல் போய்விடாமல் இருக்கவும், தன்னையும் தன்
திறமையையும் அறுமுகப்படுத்தவும், ஆங்கில மொழி ஆற்றல் அவசியம் என்றும், மெட்ரிக்
பள்ளி மற்றும் கல்லூரிகளையும் விஞ்சும் அளவிற்கு இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த
இலக்கியம் சார்ந்த படங்கள், செய்திகள், மாணவர்களின் திறமைகள் இருந்தன என்றும், வார்த்தை என்று படிக்காமல் இது நம் வாழ்க்கை
என்று படித்தால் வசப்படும் வாழ்க்கை என்றும் சிறு சிறு கதைகள் மூலமும் அழகாக
விளக்கினார்.
பள்ளி
மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் எல்லா மாணவர்களுக்கும் இலவசமாக ஸ்போக்கன்
இங்க்லீஸ் புத்தகம் வெளியிடப்பட்டு வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆங்கில நாடகம்,
நடனம், அபிநயக்கூத்து, ஆங்கில நகைச்சுவை துணுக்குகள், மூன்று நிமிடத்தில் ஓவியம்
வரைதல் மற்றும் உரையாடல் ஆகியவற்றை முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசி
செய்துகாட்டி மாணவர்கள் அசத்தினார்கள். இலக்கியமன்றப் போட்டிகளில் கலந்துகொண்டு
திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்
விழாவிற்கான ஏற்பாடுகளை முதுகலை ஆங்கில ஆசிரியர் பி ஆண்டனி செய்திருந்தார். பள்ளி மாணவி நிவேதா நன்றி கூறினார்.
No comments :
Post a Comment