2014-15 ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 250 ரூபாய் கட்டணம் செலுத்தியும், பிற வகுப்பினர் 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அனைத்து தினங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. அறிவிக்கப்பட்ட மையங்கள் தவிர, தபால் மற்றும் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்க, வரும் 20ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் மூன்றாம் வாரத்தில் தொடங்கும் என்றும் ஆகஸ்ட் 1ம் தேதி முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments :
Post a Comment