அரிமளத்தில் மாணவர் களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வைர முத்து எம்.எல்.ஏ. வழங்கினார்.
விலையில்லா சைக்கிள்- மடிக்கணினி
அரிமளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கும் விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றி யக்குழு தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.
விலையில்லா சைக்கிள்- மடிக்கணினி
அரிமளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கும் விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றி யக்குழு தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.
விழாவில் திருமயம் எம்.எல்.ஏ. வைரமுத்து, பேரூராட்சி தலைவர் மாரியப்பன், கூட்டு றவு சங்க தலைவர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மடிக் கணினி ஆகிய வற்றை வழங்கி னார்கள். பின்னர் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தரம் உயர்த்தப்படும்
இப்பள்ளி தரம் உயர்த் தப்படும். பள்ளி நேரங்களில் பள்ளியின் வாசல் வரை அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வளாகத்தை சுற்றி மீதம் உள்ள பகுதிகளில் சுற்று சுவர் கட்டி தரப்படும். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்யும் நலத் திட்டங்களை வரலாறு சொல்லும். முதல்-அமைச்சர் சாதனைகள் உலகம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும். இப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக் கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவிற்கு ஒன்றியக்குழு துணைத் தலைவர் திலகர், கிராம கல்விக்குழு தலைவர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன், கூட் டுறவு சங்க தலைவர்கள் பழனியப்பன், சண்முகம், ரெங்கசாமி, துணைத் தலைவர்கள் மணிமுத்து, முத்துராமன், கே.புதுப்பட்டி முருகன், கூட்டுறவு இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக தலைமை ஆசிரியர் சண் முகம் வரவேற்றார்.
முடிவில் துணை தலைமை ஆசிரியர் பழனியப்பன் நன்றி கூறினார்.
தரம் உயர்த்தப்படும்
No comments :
Post a Comment