அரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம்
12 ’அ’ மாணவர்கள்
நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் 12 ’அ’ - (கணிதம்) மாணவர்களே அனைத்துக்கும் முன்னாள் இருப்பார்கள். பிரியாவைடை நிகழ்விலும் இதுதான் நடந்தது. மற்ற மாணவர்கள் அனைவரையும் விஞ்சும் விதமாக அமைந்தது அவர்கள் நடத்திய பிரியாவிடை நிகழ்ச்சி.
கடந்த பிப்ரவரி ’24’ம் தேதி நமது பள்ளி வளாகம் ஒரு திருவிழா போல களைகட்டியது. வாசலெல்லாம் கோலங்கள், வரவேற்புக்காக தோரணங்கள் என திரும்பிய பக்கமெல்லாம், கலர் கலராக மின்னியது.
இவ் விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் மேதகு. சார்லஸ் சாமுவேல் தலைமைதாங்கினார். மேலும் உதவித் தலைமையாசிரியர் திரு. பொன்.பழனியப்பன் (கணித ஆசிரியர்), திரு. நடராஜன் (தமிழ் ஆசிரியர்), திரு. சுதந்திரன் (தாவரவியல் ஆசிரியர்), திரு. திருமுருகன் (இயற்பியல் ஆசிரியர்), திரு. ஆண்டனி (ஆங்கில ஆசிரியர்), திருமதி. சித்ரா (விலங்கியல் ஆசிரியை) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தலைமையாசிரியர்
அதுமட்டுமின்றி திரு.ஹரிஹரன் (தொழிற்கல்வி ஆசிரியர்-வணிகவியல்), திரு. கருப்பையா (இடைநிலை ஆசிரியர்), திருமதி. செந்தமிழ் செல்வி (இடைநிலை ஆசிரியை), திரு. இளங்கோ (இடைநிலை ஆசிரியர்), திரு. சிவகுருநாதன் (தொழிற்கல்வி ஆசிரியர்-வேளாண்மை), திரு. அன்புராஜா (தொழிற்கல்வி ஆசிரியர்-மின்னியல்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், வாழ்த்துரை வழங்கவும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
வேதியியல் ஆசிரியர் திரு.ரமேஸ்
சில 12-அ மாணவர்கள், முத்தாய்ப்பாக பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் தங்கள் வகுப்புத்தோழர்களுக்கு ’பிரியாவிடை உரை’ நிகழ்த்தினார்கள். கவிதைகளும் வாசித்து அசத்தினர். முடிவாக விழாவின் ஏற்புரையை வகுப்பாசிரியர் திரு.ரமேஸ் (வேதியியல் ஆசிரியர்) அவர்கள் உணச்சிகரமாக நிகழ்த்தினார்.
No comments :
Post a Comment