இணையதள உலகின் முன்னணி தேடுதல் நிறுவனமான "கூகுள்', இந்தியாவில் உள்ள பின் தங்கிய கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ முன்வந்துள்ளது. பார்தி பவுண்டேஷன் எனும் தனியார் அமைப்பு பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்திரபிரேதசம் ஆகிய மாநிலங்களின் கிராமப்புறங்களில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்தி வருகிறது.
இது ஏழை மாணவர்களுக்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்ட பள்ளிகளாகும். இதில் 50 பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக "கூகுள்' நிறுவனம் 25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கல்வி மற்றும் சுகாதார உதவிகளுக்காக கூகுள் ஆண்டுதோறும் 750 கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்நிறுவனம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
இதே போல நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்கள் பலவும் கிராமப்புற பகுதிகளில் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவிட முன்வர வேண்டும் என்றும், இதனால் கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பெருமை இந்நிறுவனங்களுக்கு கிடைக்கும் என்றும் கல்வியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
No comments :
Post a Comment