அரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம்
12 ’அ’ பிரிவு மாணவர்கள்
வாழ்த்துக்கவிதை
வணக்கம் !
பிரியாவிடை என்பது
நினைவுகளுக்கு சமாதி அல்ல
நினைவுகளில் சரிபாதி
நீங்கள் என்பதால்...
அன்பொழுக ஆற்றுப்படுத்தியதால்
கோயில் அர்ச்சனை மட்டுமல்ல
50 லட்சியவாதிகளின்
லட்சார்ச்சனையும் கூட - இது
சரிபாதி சந்தனமும்
சவ்வாதும் பூசும்
சந்தர்ப்பமும் அல்ல - இது
உணர்வுகளின் சங்கமம்
தேனொழுகப்பேசிய திருவாய்க்கு
அன்பொழுகப்பேசிய ஆன்றோருக்கு
கல்வி கரையில
கேட்போர் மனத்திரையில - என்று
எடுத்தியம்பிய மேன்மக்களுக்கு,
வார்த்தைப் பூக்களால்
வாழ்க்கை முழுவதும் வாழ்த்தும்
திருவிழா தொடக்கம் தான்
பிரியாவிடயின் பிரதான காட்சி..
நன்றி: ரா.ரமேஸ் (வகுப்பாசிரியர், 12 அ)
No comments :
Post a Comment