Saturday 3 September 2016

பள்ளி வகுப்பறைகளின் நிலையை சரி செய்ய உதவி தேவை


நம் பள்ளியின் பெரும்பான்மையான வகுப்பறைகள் கீழ் தளங்கள் பெயர்ந்த நிலையில் கல்லும், மண்ணும் சேர்ந்த நிலையில் உள்ளது. இதனால் இருக்கின்ற வகுப்பறைகளையும் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.












சில கட்டிடங்களில் மேற்கூரைகள் பழுதடைந்து எப்பொழுது விழும் என்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கின்றனர். இதை தவிர்க்க மாணவர்களை மரத்தடியிலும், கலையரங்கத்திலும் வைத்து வகுப்புகள் நடத்த வேண்டியுள்ளது.







பள்ளி வளாகச் சுவர்கள் கூட சில இடங்களில் சேதமடைந்துள்ளது. பள்ளி நடைபெறும் வேளைகளில் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு வெளியே சென்று வர வாய்ப்பாக அமைகிறது. மேலும் விடுமுறை தினங்களின் சமூக விரோதிகள் பள்ளிக்குள் நுழையவும் இவ்வழியே பயன்படுத்துகிறார்கள்.




இவையனைத்தையும் அதி விரைவில் சீரமைக்க வேண்டிய நிலை இருப்பதால், அரசுடன் நாமும் சேர்ந்து ஒத்துழைத்தால் மட்டுமே புணரமைக்க இயலும். அதற்காக தான் இந்த பதிவு..

உதவிக்கரம் நீட்டும் நபர்கள், புரவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், வெளிநாடு வாழ் நண்பர்கள் பங்களிப்பை கவுரவிக்கும் பொருட்டு கல்வெட்டுக்கள் அமைத்து பராமரிக்கப்படும் என்பதை பள்ளியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். 



No comments :

-

-