Sunday 2 November 2014

வெற்றி சாத்தியப்பட வேண்டுமெனில்...



வாழ்க்கையில் அனைவருமே வெற்றி பெறத்தான் விரும்புகிறோம். அது சிறிதாகவும் இருக்கலாம்; பெரிதாகவும் இருக்கலாம். அது வேலை, பணம், புகழ், பதவி, தேர்ச்சி, ஆரோக்கியம், நட்பு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தேர்வில் 100க்கு 100 பெறுவது மாணவனுக்கு வெற்றி; விளையாட்டில் விருதுகள் வாங்குவது விளையாட்டு வீரரின் வெற்றி; புத்தகம் எழுதி புகழ்பெறுவது எழுத்தாளரின் வெற்றி; பதவிகளை பெறுவது அரசியல்வாதியின் வெற்றி; சிலருக்கு வெற்றி என்பது விரும்பிய பெண்ணை திருமணம் செய்வதாகக் கூட இருக்கலாம்.
இத்தகைய வெற்றி அனைவருக்கும் கண்டிப்பாகசாத்தியமே.  அதற்கு அதிர்ஷ்டம்; சிபாரிசு, பணம் ஆகியவை தேவை என்று சிலர் நினைக்கலாம். ஒரு சதவீதம் பேருக்கு வேண்டுமேயானால் இந்த வகையில் வெற்றி கிடைக்கலாம்.
எந்த செயலிலும் வெற்றிபெற வேண்டுமெனில் திட்டமிடுதல் அவசியம். திட்டமிட்டு முயற்சி செய்தால் வெற்றி அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை, எனக்கு ஒரு மரத்தை வெட்ட 8 மணி நேரம் இருக்கிறதென்றால், அதில் 6 மணி நேரத்தை கோடாரியைத் தீட்டுவதில் செலவழிப்பேன் என கூறினார். இது எவ்வளவு பெரிய உண்மை.
ஒரு கூர்மை இல்லாத கோடாரியால் எத்தனை மணி நேரம் ஆனாலும் மரத்தை வெட்ட முடியாது. கோடாரியை கூர்மைப்படுத்துவதில் செலவிடும் நேரம், நமக்கு மரத்தை வெட்டுவதற்கு ஆகும் நேரத்தை குறைக்கப் பயன்படும் அல்லவா. பலரும் இவ்வாறுதான் மொக்கை கோடாரிகளைகளை வைத்துக்கொண்டு கோடாரியையும், மரத்தையும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். எனவே புத்தியிலும் கூர்மையாக இருக்க வேண்டும்.

- கல்விமலர்

No comments :

-

-