Thursday 7 April 2011

கொட்டிக் கொடுக்கும் கட்டுமானப் பொறியியல்


கட்டுமான பொறியியல் என்பது மனிதனின் நாகரிக வாழ்வுக்கு அவசியமான வசதிகளைத் திட்டமிடுவது, கூராய்வு செய்தல், கட்டுமானம், அவற்றை பேணி பராமரித்தல், ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியது. கட்டுமான பொறியாளர் என்பவர் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் எழும் சவால்களை எதிர்கொள்கிறார்.


போக்குவரத்து நெரிசல், குடிநீர் மற்றும் ஆற்றல் தேவைகள், நகர்ப்புற மேம்பாடு, சமூகத் திட்டமிடல் ஆகியவற்றில் எழும் சவால்களை எதிர்கொண்டு பிரச்னைகளை தீர்ப்பவராகவும் சமூக மேம்பாட்டுக்கு பங்களிப்பவராகவும் உள்ளார்.


இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியானது முக்கியமாக உள்கட்டமைப்பு வசதிகள், விண்வெளி ஆராய்ச்சி, முறைசாரா ஆற்றல் ஆகியவற்றோடு நெருக்கமாக பிணைந்துள்ளது. பிரமிடுகளிலிருந்து விண்வெளி நிலையங்கள் வரை, சவால்களை எதிர்கொண்டபடியே இருக்கிறார்கள் கட்டுமான பொறியாளர்கள். அவர்கள் தாம் வாழும் காலத்தையும் தாண்டி நவீன நாகரிகத்தையும் உள் கட்டமைப்புகளையும் கட்டுமானம் செய்கிறார்கள்.


தொழில்நுட்ப புரட்சி, மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் சவால்கள் இன்னும் எத்தனையோ. அடுத்த பத்து ஆண்டுகள் படைப்பாக்கம் அதிகம் தேவைப்படும், தேவைகள் அதிகம் கொண்ட, கட்டுமான பொறியாளர்களுக்கு சிறந்த வெகுமதிகளைத் தரக்கூடிய காலமாக இருக்கப்போகிறது. நீங்கள் கட்டுமான பொறியியலை உங்களது எதிர்காலமாக தேர்ந்தெடுக்க சரியான தருணம் இது தான்.


திட்டமிடுதல், அலசி ஆராய்தல், வடிவமைப்பு, கட்டுமானம், ஆராய்ச்சி, கற்பித்தல், மேலாண்மை என எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் ஒரு கட்டுமான பொறியாளருக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.


வழங்கப்படும் படிப்புகள்

1. Diplomo (Civil Engineering)
2. B.E (Civil Engineering)
3. M.E (Civil Engineering)
4. Ph.D., (Civil Engineering)


மேலும் விவரங்களுக்கு அணுகவும்: WWW.StudyGuideIndia.com

No comments :

-

-