நமது பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் திரு. பி.திருமுருகன் அவர்கள் கடந்த 5 ஆண்டுகாலமாக நம் பள்ளியில் பணிஆற்றியுள்ளார். திருச்சியை சேர்ந்த இவர் தினமும் 75 கிமீ தூரம் பயணித்து நமக்காக, கடமை தவறாது பணி செய்துள்ளார் என்வதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
இக்காலத்தில் மிகச்சிறப்பாக பணிபுரிந்து பள்ளியின் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்தியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தன் பாடமான இயற்பியலிலும் 95% - 99% வரை தேர்ச்சியைப் பெற்றுத்தந்துள்ளார்.
காலத்தின் கட்டாயத்தால் பணிமாறுதல் பெற்று கரூர் மாவட்டத்திற்கு எங்களை விட்டு பிரிந்து செல்லும், இனமான இயற்பியல் ஆசிரியர் திரு.பி.திருமுருகன் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தும்..
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
Mr. P.Thirumurugan M.Sc., M.Ed., M.Phill
We Miss You..!
No comments :
Post a Comment