மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் |
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்று, இந்த கல்வியாண்டிலேயே
சமச்சீர் கல்வியை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் என்று சட்டப்பேரவையில்
இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டப்பேரவையில் இருந்த முதலமைச்சர்
ஜெயலலிதாவிற்கு தெரிவிக்கப்பட்டதும், அவர், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை
மதிக்கும் வகையில் சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வியாண்டிலேயே
நடைமுறைப்படுத்துவோம்" என்று அறிவித்தார்.
இதன் மூலம் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments :
Post a Comment