மே 22 ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாடப் புத்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், இதுதொடர்பான பிரச்னைக்கு சில சிக்கல்கள் இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கவும், அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மே 22 அன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அனைத்து துறை அமைச்சர்கள், தலைமை செயலர், மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சமச்சீர் கல்வி பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் சமச்சீர் கல்வி, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும்படியாக அமையவில்லை. தற்போதைய சமச்சீர் கல்வித்திட்டம் ஒட்டுமொத்த கல்வித்தரத்தையும் உயர்த்த வழி செய்யாது. எனவே சமச்சீர் கல்வி வேண்டும் என்றும், ஆனால் அதேநேரத்தில் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்படுகிறது.
நடப்பாண்டு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது என்றும், இந்த கல்வி ஆண்டில் பழைய பாடத்திட்டங்களையே பின்பற்றலாம் என்றும், புதிதாக புத்தகம் அச்சிட கால அவகாசம் தேவைப்படுவதால் ஜூன் 1 ம் தேதி முதல் துவங்கவிருந்த பள்ளியை ஜூன் 15 ம் தேதி திறக்கலாம் என்றும் உத்தரவிடப்படுகிறது.
No comments :
Post a Comment