Tuesday 11 February 2014

அரசு மேல்நிலைப்பள்ளி : ஆங்கில இலக்கிய மன்ற விழா - நாளிதழ் செய்திகள்


தாய்மொழித்திறனுடன் ஆங்கில அறிவும் அவசியம் என்றார் புதுகை அரசு மன்னர் கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியர் எஸ். கணேசன்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில்  நடந்த ஆங்கில இலக்கியமன்ற விழாவில் அவர் மேலும் பேசியது:
தாய்மொழியோடு தனித் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஆங்கில மொழியறிவும் தேவையாக இருக்கிறது.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களாகிய நீங்கள் மெட்ரிக் பள்ளி மாணவர்களை விஞ்சும் அளவிற்கு ஆங்கில மொழியறிவை பெற்றிருப்பது பாராட்டத்தக்கது.
ஆங்கிலம் குறித்து மிரட்சியை ஏற்படுத்தாமல், எளிய முறையில் கனிவோடு பாடம் நடத்தினால் தமிழ்வழிக் கல்வி மாணவர்களும் ஆங்கிலத்தை ஆர்வத்தோடு கற்க முடியும் என்பதற்கு நீங்களே எடுத்துக்காட்டு. ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வது  மிகவும் எளிதானது என்றார்.
இதைத் தொடர்ந்து, மாணவர்கள் ஆங்கிலத்தில் நாடகம், நடனம், அபிநயம், உரையாடல், நகைச்சுவைத் துணுக்குகள் என பல்வேறு பிரிவுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தலைமை ஆசிரியர் ஆர். சண்முகம் தலைமை வகித்தார்.
இதில் மகாராஷ்டிரா சஞ்ஜீவன் வித்யாலயா இன்டநேஷனல் பள்ளியின் முன்னாள் முதல்வர் ஹெலன் தன்ராஜ், மலையேறும் வீரர் எஸ். தன்ராஜ், வின்சென்ட், ரவி தன்ராஜ் உள்ளிட்டோர் பேசினர். முதுகலை ஆங்கில ஆசிரியர் பி. ஆண்டனி வரவேற்றார். மாணவி நிவேதா நன்றி கூறினார்.
புதுக்கோட்டை, : புதுக்கோட்டையை அடுத்த அரிமளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா கடந்த 31ம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் சண்முகம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மா.மன்னர் கல்லூரி போராசிரியர் கணேசன் கலந்து கொண்டு பேசுகையில்,

தாய் மொழியோடு தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஆங்கில மொழி அறிவும் இன்றைய தேவை யாக இருக்கிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் மெட்ரிக் பள்ளிகளை விஞ்சும் அளவிற்கு ஆங்கில மொழியறிவை பெற்றிருப்பது பாராட்டத் தக்கது. ஆங்கிலம் குறித்து மிரட்சியை ஏற்படுத்தாமல், எளிய முறையில் ஆசிரியர்கள் கனிவோடு பாடம் நடத்தினால் தமிழ்வழிக் கல்வி மாணவர்களும், ஆங்கிலத்தை ஆர்வத்தோடு கற்பர் என்பதற்கு நீங்களே உதாரணம் என்றார்.  

மாணவர்கள் ஆங்கிலத்திலேயே நாடகம், நடனம், அபிநயம், உரையாடல், நகைச்சுவை துணுக்குகள் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விழா வில் மஹாராஸ்டிரா சஞ்ஜீவன் வித்யாலயா இன்டநேஷ்னல் பள்ளியின் முன்னாள் முதல்வர் ஹெ லன் தன்ராஜ், மலையேறும் வீரர் தன்ராஜ், வின்சென்ட், ரவி தன்ராஜ், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முன்ன தாக முதுகலை ஆங்கில ஆசிரியர் ஆண்டனி வரவேற்றார். மாணவி நிவேதா நன்றி கூறினார்.


புதுக்கோட்டை, பிப். 6 -

புதுக்கோட்டையை அடுத்த அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஆர்.சண்முகம் தலைமை வகித்தார். புதுகை மன்னர் கல்லூரி பேராசிரியர் எஸ்.கணேசன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, தாய்மொழியோடு தனித் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஆங்கில மொழியறிவும் இன்றைய தேவையாக இருக்கிறது. அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மெட்ரிக் பள்ளிகளை விஞ்சும் அளவிற்கு ஆங்கில மொழியறிவை பெற்றிருப்பது பாராட்டத்தக்கது. ஆங்கிலம் குறித்து மிரட்சியை ஏற்படுத்தாமல், எளிய முறையில் கனிவோடு பாடம் நடத்தினால் தமிழ்வழிக் கல்வி மாணவர்களும் ஆங்கிலத்தை ஆர்வத்தோடு கற்பர் என்பதற்கு இது உதாரணம் என குறிப்பிட்டார்.மாணவர்கள் ஆங்கிலத்திலேயே நாடகம், நடனம், அபிநயம், உரையாடல், நகைச்சுவைத் துணுக்குகள் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழாவில் மகாராஷ்ட்ரா சஞ்ஜீவன் வித்யாலயா இண்டர்நேஷனல் பள்ளியின் முன்னாள் முதல்வர் ஹெலன் தன்ராஜ், மலையேறும் வீரர் எஸ்.தன்ராஜ், வின்சென்ட், ரவி தன்ராஜ் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக முதுகலை ஆங்கில ஆசிரியர் பி.ஆண்டனி வரவேற்க மாணவி நிவேதா நன்றி கூறினார்.

No comments :

-

-