Sunday 22 May 2011

பள்ளிகள் ஜூன் 15 ல் திறப்பு


மே 22 ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாடப் புத்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும்,இதுதொடர்பான பிரச்னைக்கு சில சிக்கல்கள் இருப்பதால் பள்ளிகள்திறப்பை தள்ளி வைக்கவும்அமைச்சரவை கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில்மே 22 அன்று அமைச்சரவைகூட்டம் நடந்ததுஇக்கூட்டத்தில்அனைத்து துறை அமைச்சர்கள்,தலைமை செயலர்மற்றும் பல்வேறு துறை செயலர்கள்பங்கேற்றனர்இந்த கூட்டத்தில் சமச்சீர் கல்வி பற்றி முக்கிய முடிவுஎடுக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறுநடைமுறைப்படுத்தப்படவிருக்கும் சமச்சீர்கல்விமாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும்படியாக அமையவில்லைதற்போதைய சமச்சீர்கல்வித்திட்டம் ஒட்டுமொத்த கல்வித்தரத்தையும் உயர்த்த வழி செய்யாதுஎனவே சமச்சீர் கல்வி வேண்டும்என்றும்ஆனால் அதேநேரத்தில் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர்குழு ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்படுகிறது.

நடப்பாண்டு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது என்றும்இந்த கல்வி ஆண்டில் பழையபாடத்திட்டங்களையே பின்பற்றலாம் என்றும்புதிதாக புத்தகம் அச்சிட கால அவகாசம் தேவைப்படுவதால்ஜூன் 1 ம் தேதி முதல் துவங்கவிருந்த பள்ளியை ஜூன் 15 ம் தேதி திறக்கலாம் என்றும்உத்தரவிடப்படுகிறது.

No comments :

-

-