Tuesday 1 February 2011

நாட்டுப்புறக் கலை படிக்க

நாட்டுப்புறக் கலை என்பது புராணக்காலங்கள் அல்லது அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் குறித்த இசைப்பாடல்கள், வாய் வழியாக கூறப்படும் வரலாறுகள், அவர்களின் பாரம்பரிய மரபுகள், பழக்க வழக்கங்கள், பழ மொழிகள், பேச்சுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். 


நம் நாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இத்துறை சார்ந்த படிப்புகளை வழங்கி வருகின்றன. அவற்றை காண்போம்.

* இந்திராகாந்தி திறந்தவெளிப்பல்கலைக்கழகம், புதுடில்லி நாட்டுப்புறக்கலை மற்றும் கலைசார்ந்த படிப்புகளில் ஒரு வருட முதுநிலை டிப்ளமோ படிப்பு இங்கு அளிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.ignou.ac.in

* மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை இப்பல்கலைக்கழகத்தில் இத்துறையின் கீழ், எம்.ஏ.,, எம்.பில்.,, பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.mkuniversity.org

* ஐதராபாத் பல்கலைக்கழகம், ஐதராபாத் இங்கு, இத்துறை சார்ந்த பிஎச்.டி., மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் உள்ளன. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு uohyd.ernet.in

* திராவிடன் பல்கலைக்கழகம், சித்தூர் இப்பல்கலை.,யில் நாட்டுப்புறக் கலையில் எம்.ஏ., எம்.பில்., முதுநிலை டிப்ளமோ மற்றும் பிஎச்.டி.,படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. விவரங்களுக்கு www.dravidianuniversity.ac.in

* மைசூரு பல்கலைக்கழகம், மைசூரு இக்கல்வி நிறுவனத்தில் இத்துறையின் கீழ் எம்.ஏ.,படிப்பு வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.unimysore.ac.in/

No comments :

-

-