கல்விப்புரவலர்
தெய்வத்திரு. வள்ளியப்பன் செட்டியார்
தெய்வத்திரு. வள்ளியப்பன் செட்டியார்
3 ஆம் ஆண்டு நினைவு பரிசுகள் வழங்கும் விழா – 2016
அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வருடா வருடம் தெய்வத்திரு. வள்ளியப்பன் செட்டியார் அவர்களின் நினைவாக அமெரிக்காவில் வசிக்கும் குடும்பத்தார்கள் சார்பாக பரிசுகள் வழங்கப்படுகிறது.
தெய்வத்திரு. வள்ளியப்ப செட்டியார் அவர்களின் பிறந்த நாளான ஜீன் 6 ந் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வில் பொறியியல் / மருத்துவ கட்-ஆப் மதிப்பெண்ணில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவர்களுக்கும், அதற்கான பாடங்களில் அதிக மதிப்பெண் சராசரி பெற்று தந்த ஆசிரியர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு பொறியியல் / மருத்துவ கட்-ஆப் மதிப்பெண்ணில் முதலிடம் பெற்ற மாணவன் S. நாகராஜ் க்கு ரூ 10,000 பரிசும், இரண்டாமிடம் பெற்ற A. பெரியசாமி க்கு ரூ 4,000 பரிசும், மூன்றாமிடம் பெற்ற A. முகேஷ்கண்ணன் க்கு ரூ 3,000 பரிசும், ப.பவித்ரா க்கு ரூ 3,000 பரிசும் வழங்கப்பட்டது. மேலும் இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண் சராசரி பெற்ற ஆசிரியை திருமதி. M. கவிதா க்கு ரூ 5,000 பரிசும், மின்னியல் பாடத்தில் அதிக மதிப்பெண் சராசரி பெற்ற ஆசிரியர் திரு. K. அன்புராஜா க்கு ரூ 5,000 பரிசும் வழங்கப்பட்டது.
பரிசு பெற்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. R. சண்முகம் அவர்கள் பாராட்டினார்.
No comments :
Post a Comment