வீடியோக்களில் பிரபலமான YOU TUBE வலைதளம் ஆசிரியர்களுக்கென்றே பிரத்யேகமான http://www.youtube.com/teachers என்ற சேனலை உருவாக்கி உள்ளது . இந்த சேனலை பயன்படுத்தி வீடியோ மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு படங்களை நடத்த முடியும் . மேலும் கல்வி சம்பந்தப்பட்ட பல வீடியோ தொகுப்புகளை இந்த சேனலில் பார்த்து உங்கள் அறிவு திறனை வளர்த்து கொள்ளலாம்.
இந்த வலை தளம் கீழ்க்காணும் சேவைகளை அளிக்கிறது.
1. நேரடி ஒளிபரப்பு (LIVE TELECAST)
2. நேரடியாக கருத்துக்களை பகிர்த்து கொள்ளும் வசதி
3. உங்களுக்கு பிடித்த வீடியோக்களை தொகுப்பாக அமைத்துக்கொள்ளலாம்.
4. நீங்கள் கடைசியாக பார்த்த வீடியோவை எளிதில் சேமித்து வைக்கும் வசதி.
5. குறிப்பிட்ட உங்கள் பாடங்களுக்கு ஏற்ற வீடியோக்களை தேடி எடுக்கும் வசதி.
அது மட்டும் அல்லாமல் http://www.youtube.com/education என்ற வலைதளத்தில் கல்வி மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட பல வீடியோ தொகுப்புகள் உள்ளளன. இந்த வலைபதிவும் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள பயன் உள்ளதாக உள்ளது.
Source: KalviKalnjiyam
No comments :
Post a Comment