வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது தொடர்பாக ஆலோசனை வழங்க தொலைபேசி சேவையை மாநில நுகர்வோர் சேவை மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில நுகர்வோர் சேவை மையம் கல்வி கடன் பெறுவது தொடர்பாக ஆலோசனை வழங்க 044 - 28592828 என்ற தொலைபேசி எண்ணில் சேவையை தொடங்கியுள்ளது.
இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அலுவலர்கள், நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பதிலளிப்பார்கள் என்று நுகர்வோர் சேவை மையம் அறிவித்துள்ளது.
No comments :
Post a Comment