Tuesday 7 February 2012

உயிரோட்டமான கவின்கலை படிப்பு


கவின்கலை என்பது, ஒரு சுயவெளிப்பாட்டு தன்மைக் கொண்ட படிப்பாகும். மேலும், பலவிதமான முறைகளில் ஒரு மாணவர் தனது கலை வெளிப்பாடுகளை மேம்படுத்த மற்றும் சீர்திருத்த இத்துறை உதவுகிறது.
சில கல்லூரிகள் கவின்கலை தொடர்பான படிப்பை Bachelor&'s of Visual Arts(BVA) என்றும் Bachelor&'s of Fine Arts(BFA) என்றும் இரு பெயர்களில் வழங்குகின்றன.
கவின்கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், ஏதேனும் ஒரு குறிப்பிட்டப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் தனது கவனத்தை செலுத்த வேண்டும். பெயின்டிங், சிற்பம், துணைநிலை ஆர்ட் மற்றும் கலைப் படிப்பு உள்ளிட்ட பலவித பிரிவுகள் சிறப்பு படிப்பை மேற்கொள்ளத்தக்கவை.
படிப்பின் தன்மைகள்

சிற்பக்கலை என்பது, கற்கள் அல்லது மரங்களை செதுக்கியோ, களிமண்ணைப் பயன்படுத்தியோ சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை உருவாக்குதல் ஆகும். துணைநிலை ஆர்ட் என்பது தகவல்தொடர்பு வடிவமைப்பைப் பற்றிய தகவலை வழங்குகிறது. வடிவமைப்புத் தொழில்துறைக்கான(இன்டஸ்டிரியல், கிராபிக், பேஷன் மற்றும் இன்டீரியர் டிசைன்) பயிற்சியையும் இது வழங்குகிறது.
இதுதொடர்பான தேர்வானது, பொதுஅறிவு, Life drawing மற்றும் Painting ஆகிய அம்சங்கள் கொண்டது. பொதுஅறிவுத் தாளில், கலைத்துறையில் சமீபத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் பற்றி கேட்கப்பட்டிருக்கும்.
Life drawing தேர்வுக்கு, Still மாடல், வரைவதற்கு கொடுக்கப்படும் மற்றும் ஒரு பேருந்து அல்லது ரயில் நிலையத்தை வரைவதாக கேட்கப்பட்டிருக்கும்.
சில கல்லூரிகள் 1 முதல் 4 வருடங்களைக் கொண்ட டிப்ளமோ படிப்புகளையும் இத்துறை சார்ந்து வழங்குகின்றன.
தேவைப்படும் திறன்கள் மற்றும் கற்றல்

பொதுவாக ஆர்ட் கல்லூரிகளில், 20-25 மாணவர்களுக்கு மேல் எடுக்கப்படுவதில்லை. மாணவர் தேர்வு செயல்முறையின்போது, படைப்புத் திறனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நீங்கள் கண்டதை விவரித்தும், அழகாகவும் சொல்லும் திறமை இருக்க வேண்டும். எனவே, ஒரு மாணவர் சிறந்த உள்வாங்கும் திறனைக் கொண்டுள்ளாரா? என்று பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு மாணவர், ஒரு பொது இடத்தை வரையலாம். ஆனால், அதனையும் தாண்டிய சில அம்சங்கள் அவரிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு விஷயத்தை அவர் கவனமாகப் பார்க்கிறாரா? சாலையின் பிச்சைக்காரர்கள், நடந்துசெல்லும் குழந்தை, ஓரத்தில் இருக்கும் குப்பைத் தொட்டி, மின்கம்பம் உள்ளிட்ட பலவிதமான அம்சங்களை அவர் உள்வாங்கியிருக்கிறாரா? என்பதெல்லாம் கவனிக்கப்படும். இதன்மூலம் அவரது நினைவுத்திறனும் சோதிக்கப்படுகிறது.
வடிவமைப்பு, கிராபிக்ஸ் மற்றும் வணிக ஆர்ட் போன்ற அம்சங்களில் ஒருவர் புதிய பரிமாணங்களையும் வெளிப்படுத்தலாம். ஒரு ஆர்ட், விளம்பரப்படுத்தல் போன்ற வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படலாம். ஒரு பொருளின் வியாபாரத்தில், புத்தக வடிவமைப்பு, விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் பிற காட்சிப் பலகைகள் போன்றவை அந்த நடவடிக்கையில் முக்கியமானவை.
Print making என்ற படிப்பில், பலவிதமான டிசைன்களை உருவாக்க, டைபோகிராபி மற்றும் பிம்பம் என்ற இரண்டையும் இணைப்பதற்கு ஒரு மாணவருக்கு கற்றுத்தரப்படுகிறது. கற்கள், மரம், துத்தநாகம் மற்றும் செம்பு உள்ளிட்டவற்றில் பலவிதமான அச்சு நுட்பத்தை மாணவர்கள் கற்கிறார்கள். மேலும், பிரின்ட் ஆர்ட் முறையானது, பிற வகைகளைவிட செலவு குறைந்தது என்றும் சொல்லப்படுகிறது.
வேலை வாய்ப்புகள்

ஏறக்குறைய அனைத்து வியாபாரங்களிலும், கலைகளைப் பயன்படுத்துவது, முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. எனவே, கலைப் படித்த மாணவர்கள், ஆர்ட் ஸ்டுடியோக்கள், அனிமேஷன், விளம்பர நிறுவனங்கள், மல்டிமீடியா கம்ப்யூட்டர் நிறுவனங்கள், செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் மற்றும் பேஷன் நிறுவனங்கள் போன்ற பலவற்றில் வேலை வாய்ப்புகளைப் பெற்று, தங்களின் திறமைகளை நிரூபிக்கலாம்.
ஏராளமான, வணிக கலைஞர்கள், Freelance என்ற நிலையில் பணிபுரிகிறார்கள். BFA பட்டதாரிகள் கற்பித்தல் துறையிலும் செல்லாம். கலை மேலாண்மை என்பது ஒரு புதிய துறையாக பரிணமித்துள்ளது.
மேலே குறிப்பிட்டதைப் போன்று, கலைப் படிப்புகள் பலவிதமான வாய்ப்புகளையும், தனக்குள் அசாத்திய அம்சங்களையும் கொண்டுளளன. எனவே, வித்தியாசமான திறன்கொண்ட மாணவர்கள், சமூகம் கூறும் புளித்துபோன விஷயங்களான மருத்துவம், பொறியியல் ஆகியவற்றை விடுத்து, கவின்கலை படிப்புகளில் சேரலாம்.
சென்னை எழும்பூரிலுள்ள கவின்கலை கல்லூரி, தமிழகத்தில் இப்படிப்பை வழங்கும் ஒரு முக்கிய கல்வி நிறுவனமாகும்.
தினமலர் 

No comments :

-

-