Thursday 27 January 2011

சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் வெளியீடு


சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டங்கள், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நடப்பு கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் அமலுக்கு வருகின்றன. இதற்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, வகுப்பு வாரியான, பாடவாரியான பாடத் திட்டங்கள் விவரம், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் ( www.pallikalvi.in ) வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் (ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு), அறிவியல் (3 முதல் 10ம் வகுப்பு வரை), சமூக அறிவியல் (3 முதல் 10ம் வகுப்பு  வரை) ஆகிய பாடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்ட பாடத் திட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

முழுமையான பாடப் புத்தகங்கள், வரும் ஜூன் மாதம் பள்ளிகளில் மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும்.

No comments :

-

-